திருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன.ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பார்த்திருக்க, சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை குறித்த கருத்துகளைப் பற்றி அதிகம் கண்டறிந்து எவரும் எழுதவில்லை என்ற குறை தொடர்ந்து இருந்துகொண்டே வரும் நேரத்தில்தான், கம்பர் காவியத்தையும் மேலாண்மைக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டு, மேலாண் வல்லுனர் சோம வள்ளியப்பன், மிக விரிவாக எழுதியிருக்கும் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் தமிழுக்கு புது வரவாக வருகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகளான இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்தோரைத் தேர்வு செய்தல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், தலைமையேற்று வழிநடத்தல் ஊக்கப் படுத்தல், கண்காணித்தல், கட்டுப் படுத்தல், மற்றும் செயல்முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளித்தல், என்ற அத்தனை மேலாண்மை கோட்பாடுகளும் இராமாயணத்தில் இருப்பதை அழகாக எடுத்துக்காட்டும் இந்த நூல், ஒரு அறிய ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, மேலாண்மையை இலக்கிய நயத்துடன் விளக்கும் அற்புத ஆசானும்கூட. ஒரு ஆய்வுநூலின் நேர்த்தியுடனும், சுவை குன்றாத இலக்கிய நூலின் சுவாரஸ்யத்துடனும் படிப்பவர்க்கும் மகிழ்வு தரும் மாறுபட்ட ஒரு படைப்பாக, ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பு. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமைகொள்ளவேண்டிய நூல்.
மேனேஜ்மெண்ட் குரு கம்பன்
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789383067343
- Pages: 192
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789383067343
Category: கட்டுரைகள்
Author:சோம. வள்ளியப்பன்
Be the first to review “மேனேஜ்மெண்ட் குரு கம்பன்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.