பதினாறாம் நூற்றாண்டில் கிழக்கில் ஏற்படும் மேற்கத்திய ஆதிக்கத்தை, தமது பண்டைய மதகூறுகளடங்கிய ஓவியபாணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஓவியர்களைப் பற்றியும், இஸ்லாமிய மதத்தின் ஓவிய கட்டுப்பாடுகள், ஒட்டாமன் கலாச்சாரம், அரசு, குற்றம் மற்றும் காதலும் காமமும் குறித்த விசாலமான பார்வையும் நாவலின் கொடிநரம்புகளென பிரித்தெடுக்கவியலாதபடி பரவிக்கிடக்கிறது.
ஒரு சடலத்தின் பார்வையிலிருந்து நாவல் துவங்குகிறது. தான் எதற்காகவோ கொல்லப்பட்டிருக்கிறோம் எனும் விவாதத்தில் தன்னை அது அடையாளப்படுத்துகிறது. ”வசீகரன் எஃபெண்டி” என்றழைக்கப்பட்ட அந்த சடலம் அதற்கு முன்பாக நுண்ணோவியத்தின் பக்க ஓரங்களில் மெருகு தீட்டும் மெருகோவியனாக ஒட்டாமன் நுண்ணோவிய கலைக்கூடத்தில் இருந்தது. கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் கிடக்கும் இந்த சடலத்தை மையப்படுத்தியே கதை வெகு சுவாரசியமாக நகர்கிறது.
நன்றி: aadav.blogspot.com
Reviews
There are no reviews yet.