கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன்

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் 16 செப்டம்பர் 1922 அன்று கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார் . கி.ராவின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.

படைப்புலகம்:
“வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.” – எஸ்.ராமகிருஷ்ணன்.

கரிசல் மண்னையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா , கதைகள், நாவல், குறுநாவல், கட்டுரை என விரிவான தளத்தில் இயங்கினார். கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார். நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார்.

விருதுகள்:
– சாகித்ய அகாடமி விருது,
– இலக்கிய சிந்தனை விருது,
– தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான உ.வே.சா விருது,
– கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது

நன்றி: www.kirajanarayanan.com

  • 16 September 1922
  • Male
  • 9