குற்றவாளியின் மன உலகை விரிவாக ஆய்வு செய்கிறது இந்நாவல். ‘குற்றமும் தன்டனையும்’- ருஷ்ய இலக்கியத்தில் மைல் கல். உலக இலக்கியத்துக்கு கிடைத்த கருத்து கருவூலம். இருபத்தி ஆறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதிலும் உள்ள வாசகர்கள் பாராட்டப்பட்ட இந்நாவல் இப்போது, இனிய எளிய தமிழில், ஒரு வரிகூட சுருக்கப்படாத முழுமையான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
ரஸ்கால்நிகாப் என்ற இளைஞன் செய்யும் கொலைதான் இந்த புகழ்பெற்ற நாவலின் கரு. வாழ்வின் இக்கட்டுகளில் சிக்கி செயலற்று நிற்கும் நிலையில் ‘உதவாக்கரையான’ ஒரு கிழவியை பணத்துக்காகக் கொலைசெய்கிறான். அந்த குற்றத்திலிருந்து தப்பியும் விடுகிறான். ஆனால் அவனில் அந்தக் கொலை உருவாக்கும் ஆழமான உளப்போராட்டம் நாவல் முழுக்க நீள்கிறது. கடைசியில் அவன் தன் பாவங்களை அறிக்கையிடும் ஒரு சன்னிதியைக் கண்டடைகிறான். தன் குடும்பத்துக்காக பெரும் துயரத்தை தாங்கி நிற்கும் சோனியா என்ற விபச்சாரியில். அவள் முன் மண்டியிடுகிறான். ஏனென்றால் அவள் துயரம் சுமக்கும் மானுடக்குலத்தின் பிரதிநிதி. அவள் மனித இனத்தின் வலிமிக்க இதயம்போல.
Reviews
There are no reviews yet.