மக்கள் மனதிலிருந்து அகற்ற முடியாது. அரசியல், தத்துவம், போராட்டம் போன்ற பல அம்சங்கள் குறித்து கூட்டங்களில் பேசுகிறோம். பேசுவது எளிது. அவைகளை கட்டுரைகளாக எழுதுகிற பொழுது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது . கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிற போது ஒருவரின் சிந்தனை மேலும் செழுமைப்படுகிறது.
இந்த முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கே.ஜி.பாஸ்கரன் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளிவருவது வரவேற்கத்தக்கது. இதில் 16 கட்டுரைகள் ஏற்கனவே தீக்கதிரில் பிரசுரமாகியுள்ளன. தத்துவம், வரலாறு, சோசலிசம், பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் கம்யூனிஸ்ட் அகிலம், மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல கலவையான உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
Reviews
There are no reviews yet.