பெண்கள் எழுதலாமா, அதுவும் புனைவினை எழுதலாமா, எழுதுவதாக இருந்தால் அவர்கள் என்னென்னவெல்லாம் வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் என்பது போன்ற ஆண்களின் அதிகாரக் கட்டளைகளை மீறி தைரியமாக எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. இந்தக் கதைகளை எழுதியதால் தண்டனைகளுக்கானவர்களினதும், நாடு கடத்தப்பட்டவர்களினதும், சிறையில் அடைக்கப்பட்டவர்களினதும் படைப்புகள் இவை.
எழுதுவதற்கு எல்லாச் சுதந்திரமும் உள்ளவர்கள் எழுதுவதைப் போன்றதல்லவே எழுதத் தெரிந்தவர்களின் விரல்கள் சிதைக்கப்பட்டு, எண்ணங்கள் முறிக்கப்பட்டு, முகத் திரைகளின் பின்னால் மறைந்து கொள்ளச் செய்யப்பட்டவர்களின் எழுத்து?! ஆகவேதான் இந்தக் கதைகளும் அவர்களது அந்த வலிகளையும், இரகசியங்களையும், ஆசைகளையும், சுதந்திர வேட்கைகளையும் எடுத்துரைக்கின்றன
Reviews
There are no reviews yet.