மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. அதிலும் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை என்றால் சொல்லவே வேண்டாம். எனவே அவர்களது வாழ்க்கை வரலாறுகள் மற்றவற்றைவிட சுவையானவையாக இருக்கும். அந்தசாதனையாளர் ஒரு எழுத்தாளர் என்றால் அதில் போராட்டமும் கூடுதலாக இருக்கும்.
அதன் சுவையும் கூடுதலாக இருக்கும். ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சேகரித்துப் படிக்க ஆரம்பித்தேன். எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமல்லாது எப்படி எழுதுவது, எழுத்திற்காக எப்படி உழைப்பது என்ற கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொண்டேன். அந்த எழுத்தாளர் வாழ்க்கை வரலாறுகளை நான் வாசித்த அனுபவமே இந்த சிறுநூல்.