அரசகுல வரலாற்றில் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதும் ஒருவர் கோட்டையை இன்னொருவர் இடிப்பதும் மாறிமாறி நிகழ்ந்திருக்கிறது. சிலர் இயற்கையாகவே உள்ள மலையரண்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோட்டைகளை எழுப்பினார்கள். சமவெளிப் பிரதேசத்தில் அரசாண்டவர்கள் புதிய கோட்டையை தமக்கு விருப்பமான வகையில் வடிவமைத்துக்கொண்டார்கள். எல்லாமே வெற்றியின் அடையாளங்கள்.