திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவு செய்த இவர் கவிதைகளை எழ
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவு செய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய மிக முக்கியமான படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கவிதை மட்டுமன்றி வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'காமராஜ்' திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார் கன்னி எனும் புதினத்திற்கு 2007 ஆம் ஆண்டில் விகடனின் சிறந்த புதினம் என்ற விருதையும், 2008ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார். ~ நன்றி: இந்து தமிழ் திசை
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy