எழுபது எண்பது வருடங்களாகிவிட்ட ஒரு கலைவடிவத்தில் செயல்படுபவர்களையும் அவர்களது படைப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது ஒரு மரபைக் காணும் விழைவும் அந்த
எழுபது எண்பது வருடங்களாகிவிட்ட ஒரு கலைவடிவத்தில் செயல்படுபவர்களையும் அவர்களது படைப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது ஒரு மரபைக் காணும் விழைவும் அந்தப் படைப்புகள் அந்த மரபின் தொடரிழையாகத் தெரியவருவதுமான விசேஷ அனுபவம் ஏற்படுகிறது. 30, 40 ஆண்டுகளுக்கு மேல் புத்தூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் நவீன கவிதை என்னும் ஊடகத்தில் செலவழித்த தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது அதன் வெவ்வேறு பருவங்கள், மாறும் அழகுகள், தரையிரங்கிக் கனியும் கோலங்களைப் படிப்பது தண்ணீரில் அழுத்தும்போது ஏற்படும் மூச்சுமுட்டலையும் துக்கத்தையும் இறந்து பிறந்து இறந்து இறந்து எழும் துய்ப்பையும் தருவதாக இருந்தன. தேவதச்சனின் ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து சமீபத்தில் எழுதிய இருபது முப்பது கவிதைகள் வரை வாசிக்க நேர்ந்தபோதுதான், புதுக்கவிதையிலும் புதுமைப்பித்தனின் ஒரு மரபு தொடர்வதன் தடயங்கள் கிடைத்தன. அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் இயல்பாய் சேரும் பாதை என்று அந்த தடத்தைத் தற்போது குறித்துக் கொள்ளலாமா? பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆத்மாநாம் என அந்தப் பாதையிலிருக்கும் மரங்களை எண்ணிப் பார்க்கிறேன். அங்கேதான் தேவதச்சனின் துவக்கமும் உள்ளது. ~ ஷங்கர்ராமசுப்ரமணியன்
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy