கிராமப்புறங்களில் திண்ணைகளில் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் கதை சொல்லும் மரபு இன்றும் தொடர்கிறது. எல்லாமே நாட்டுப் புறக்கதைகள் தான். அவர்கள் கூறுகின்ற கதைகளுக்கு சுமார் இருநூறு வயதிற்கு மேல் கூட இருக்கலாம். வழி வழியாக இக்கதைகள் கூறப்பட்டு பல வருடங்களையும் பல இடங்களையும் தாண்டி வந்திருப்பதனை அறிய முடிந்தது. இந்தப் பயணத்தில் இக்கதைகளின் உருவமும் உள்ளடக்கமும் காலச் சூழலுக்கு ஏற்ப மாறினாலும் அதன் உள்ளொளி மாறாமல் இருப்பதனை அறிய முடிந்தது. நம் அடுத்த தலைமுறைக்கு அக்கதைகளைக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் இக்கதைத் தொகுப்பு.