”குழந்தைகளின் இன்பமே எனது இன்பம் அவர்களுக்குத் தொண்டாற்றுவதே எனது குறிக்கோள்” என தன் வாழ்வை அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள். சிறந்த தமிழாசிரியராக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தம் இல்லத்தில் தொடர்ந்து கவிமணி சங்கத்தை நடத்தி வருபவர். தமிழ்ப் பணிக்காகத் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றவர். குழந்தைகளுக்காக 18 நூல்களை எழுதிப் பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். சாகித்திய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்.