கதையை மாற்றாமல் என்னுடைய சொற்களில் சொல்லியிருக்கிறேன். இதை மறுபடைப்பு என்றும் சொல்லலாம். இந்தக் கதைகள் கற்பனை அழகுள்ளவை. சில செய்திகளை தன்னுள் பதுக்கி வைத்துள்ளவை. படித்துப் பாருங்கள். ஆனால், படிப்பதோடு நிறுத்தி விடாதீர்கள். மற்றவர்களிடம் சொல்லிப் பழகுங்கள். அப்படி பழகினால் நீங்களும் கதைச்சொல்லி ஆகலாம். சரியா!