தென்னிந்தியாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தள மிடப்பட்டக் காலத்தில் இயக்கத்தைக் கட்டும் மாபெரும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் சுந்தரய்யா.அறுபது ஆண்டுகளுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக,காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவராக,கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியாக பலவிதமான பங்களிப்புகளைத் தந்தவர்.