ஏங்கெல்ஸ் (Engels) எப்போதும் இளைஞர்களுடன் இருப்பதையே விரும்புவார். அவர் எப்போதுமே பழக இனிமையானவர். அவரைச் சந்திக்க வருபவர்கள் பலரும் லண்டனின் சோஷலிஸ்டுகள். ஞாயிற்றுக்கிழமைகளில் பல நாடுகளிலிருந்தும் லண்டனுக்கு புலம் பெயர்ந்திருந்த சோஷலிஸ்டுகள் அவர் வீட்டிற்கு விருந்துக்கு வந்துவிடுவார்கள். அவரது உற்சாகம், நகைச்சுவை, என்றும் குன்றாத கொண்டாட்டத்தில் நனைந்து விட்டு இரவு வீடு திரும்புவார்கள்.