’ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவன் புகழ்பாடி முடியாது’…
என நபிகள் நாயகம் பற்றி ஒரு பாடல் உண்டு. மார்க்ஸ் குறித்து எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் மார்க்ஸின் எழுத்துகளில் இதுவரை அதிகம் பேசப்படாத கூறு ஒன்றினை எழுதுவதற்கு இடமும் அதை எழுதத் தகுந்த மனச்சாய்வு கொண்ட எழுத்தாளரும் இருப்பார்கள்.