உலகத்தின் மீதான அச்சமும் சந்தேகமும் நிறைந்த ஒரு முரண் பார்வையை உண்டாக்கும் சக்தி வாய்ந்தது அந்தப் பாலபருவத்து மன முள். பிள்ளைகள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படும் இந்த மானுடப் பேரவலத்தின்மீது, இந்த உலகளாவிய தீவிர சமூகப் பிரச்சினையின்மீது, ஆழ்ந்த முறையில் கருத்துச் செலுத்துகிறது இந்த நூல்; இந்த இழிவுக்கெதிரான விழிப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறது. எதிர்காலத் தலைமுறை, எதிர்காலச் சமூகத்தின் கூட்டு ஆன்மா நோயடையாதிருக்க, இந்த நூல் இப்போது ஒரு மூலிகையாகத் தோன்றியிருக்கிறது.