இப்பாடல்களை எழுதிய எம்.சி.ராஜாவும் ரங்கநாயகி அம்மையாரும் தமிழின் முன்னோடிப் படைப்பாளிகள். இருவரும் கல்வித்துறையில் உயரதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் என்றபோதும் குழந்தை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். இரட்டைப்புலவர்கள் போல இவ்விருவரும் எண்ணற்ற பாடல்களை தமிழில் எழுதியிருக்கிறார்கள். சந்தத்தாலும் கற்பனையாலும் அவை அனைத்தும் மேலான பாடல்கள். முன்னோடிப் பாடலாசிரியர்களான அவ்விருவரையும் என் பாடல்கள் தொகுப்பாக உருப்பெ றும் இத்தருணத்தில் நன்றி யுடன் நினைத்துக்கொள்கிறேன். இத்தொகுதியை அவர்களுக்குச் சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.