பொதுவுடமை இயக்கத்தில் விதைகளாக மண்ணில் ஊன்றப்படும் மார்க்சிய சிந்தனைகள் முறைவிட்டுத் துளிர்த்து வளர்ந்து பெருமரங்களாய் உலகெங்கும் தழைத்தோங்கியிருக்கின்றன. அவற்றின் வேர்களாய் சமுதாயத்தில் பரவித் தாங்கி நிற்பவர்கள் மக்களிடையே களப்பணியாற்றிடும் தோழர்கள்தான்,கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்கள் இத்தகு களப்பணித் தோழர்களால்தான் உயிர்ப்புள்ள நடைமுறையாகின்றன.