இன்றைய அறிவுலகில் பெரிதும் போற்றப்படும் வரலாற்று அறிஞராகத் திகழும் பேராசிரியர் ரொமீலா தாப்பர் பண்டைக்கால இந்தியாவிலிருந்து தொடங்கி இன்றைய காலம் வரை சமூகத்தில் எற்பட்டுள்ள மாற்றங்களை இயங்கியல் நோக்கில் உரிய ஆதாரங்களோடு தொடர்ந்து நிறுவி வருபவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி 1991 இல் ஓய்வு பெற்ற அவர். தற்போது அப்பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்து வருகிறார்.