மனித உடலின்மீதும் உள்ளத்தின்மீதும் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட வன்முறையின் வரலாறு. இதைவிடவும் தாழ்ந்தநிலைக்கு மனிதகுலம் செல்லமுடியாது. * அறம், சட்டம், உரிமை, மனிதநேயம், சுதந்தரம் ஆகிய லட்சியங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு அந்தச் சிதிலங்களைக்கொண்டு வதைமுகாம்கள் கட்டியெழுப்பப்பட்டன. 'பலவீனமான, தரமற்ற இனத்தை வலுவுள்ள, உயர்வான ஓரினம் வெற்றிகொள்வதுதான் இயற்கை' என்னும் அச்சுறுத்தும் சித்தாந்தத்தைக்கொண்டு இந்தப் பேரழிவு நிகழ்த்தப்பட்டது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யூதர்களை ஐரோப்பா முழுவதிலுமுள்ள பல வதைமுகாம்களில் தொகுத்து, மனம் கூசச் செய்யும் கொடூரங்களை நிகழ்த்தி, மிருகத்தனமாக வதைத்தும் சிதைத்தும் கொன்றொழித்தனர் நாஜிகள். வதைமுகாம்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நம்மைப்போன்ற சாமானியர்கள். அவர்களை வதைத்துக் கொன்றவர்களும்கூட நம்மைப் போன்றவர்கள்தாம். விவரிப்புக்கு அப்பாற்பட்ட வலி, வதை, ரணம் ஆகியவற்றின் வரலாறு அது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் முடிவற்ற இருளும் இதயத்தைக் கிழிக்கும் மரண ஓலங்களும் நிறைந்திருக்கின்றன. திரும்பும் பக்கமெல்லாம் மலை போல் எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. தொலைந்துபோன கனவுகளும் வற்றிப்போன உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. நாம் ஒருபோதும் காணவிரும்பாத காட்சிகளை, கேட்க அஞ்சும் ஒலிகளை, உணர மறுக்கும் உண்மைகளை மருதனின் இந்தப் புத்தகம் உயிர்ப்பித்துக் கொண்டுவருகிறது.
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9788184936636
- Pages: 230
- Format: Paperback