சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரிலஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர்,லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ் சந்த்திடம் காட்டினார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Naan Yen Nathikan Anen) என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது