சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பியர்களால் வேட்டையாடப்பட்டு, அடிமைச்சந்தையிலே விற்கப்பட்டு, அமெரிக்காவின் பருத்தி வயல்களிலும், ஆழ்துளை சுரங்கங்களிலும் மயங்கி விழுகிறவரை வேலை செய்யத் தள்ளப்பட்டனர். அந்த அடிமைகளின் உழைப்பே அமெரிக்க மூலதனத்தை உச்சாணிக் கொப்பில் தூக்கி வைத்தது என்பதைப் பின்புலமாகக் கொண்டுள்ளது இந்நூல்.