1980 முதல் பிரணாய் ராயும் இந்தியத் தேர்தல்களும் பிரிக்கமுடியாதவையாக ஆகிவிட்டன. இப்போதுள்ள வடிவத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புகளைச் செய்வதில் முன்னோடி என்ற பெருமை உடையவர்.இந்தியத் தேர்தல் அரசியலின் இரகசியங்களைப் போட்டு உடைப்பதில் சிறப்பு ஆற்றலுக்குப் புகழ்பெற்ற பிராணாய் ராயாலும், தொராப் ஆர்.சொபாரிவாலாவாலும் எழுதப்பட்ட இந்த நூல் இந்தியாவின் அரசியலிலும் தேர்தல்களிலும் ஆர்வம் கொண்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியஒன்று.இந்நூல் தீவிரமான வாக்களிப்பியலையும், முதன்மையான ஆய்வையும், இதுவரையில் வெளியிடப்படாத உண்மைகளையும் 1952, முதல்தேர்தல் நடைபெற்றது முதல் இந்தியாவின் தேர்தல் வரலாறு முழுவதையும் பற்றிப்பேசுகிறது.ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வுஇருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில்மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம்அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம்.மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை.மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும்அதே வேளையில், நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான்இருக்கிறார், அரசியல்வாதியல்ல.
- Edition: 01
- Published On: 2020
- ISBN: -
- Pages: 352
- Format: Hardcover