தமிழ் மக்கள் வரலாறு தண்டனையடைந்த தமிழ்க் குற்றவாளிகள் மலாயா, பர்மா, சுமத்ரா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மனியாவிற்கு ஆங்கிலேயரால் நாடுகடத்தப்பட்டதும். வாழ்க்கை நிலையும், 1787-1896
இந்நூல் ஐரோப்பியர் மற்றும் ஆசியத் தண்டனைக்குற்றவாளிகள் தமிழகக் கடற்கரைக்கு நாடுகடத்தப்பட்டதை அறிமுகப்படுத்துகிறது. பின்னர் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி உருவாகும் காலத்தில் தமிழக அரசியல் கைதிகளை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து பினாங்கிற்கு 1802ல் நாடுகடத்தியது பற்றி விவரிக்கிறது. ஆங்கிலேயர் ஆதிக்க காலத்தில் செங்கல்பட்டு சிறையிலிருந்து தமிழ் தண்டனைக்குற்றவாளிகளை சென்னைக்கு கொண்டு வந்து சுமத்ராவின் பெங்குலுவிற்கும் (1787-1823), பினாங்குக்கும் (1805-1855). மெலாகா. பர்மாவின் மொலுமின் மற்றும் தென்னசெரிமுக்கும் (1824-1854) சிங்கப்பூருக்கும் (1825-1857) கப்பலில் ஏற்றிஅனுப்பியது. வந்து சேர்ந்தவுடன் உடல்பரிசோதனை செய்தது. சென்னையில் நீதித் துறையும் கடல்சார் வாரியமும் நாடுகடத்தும் வழிமுறைகள் குறித்து திட்டமிட்டது. அதன் பங்கு மற்றும் முக்கியத்துவத்தையும் அலசி ஆராய்கிறது. 1841 மற்றும் 1844ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயரின் பாட்னி-பே (ஆஸ்திரேலியா) வேன்டைமேன் தீவு (டாஸ்மனியா) ஆகிய நாடுகளுக்கு மொரிஷியஸில் இருந்த தமிழ்த் தண்டனைக்குற்றவாளிகளை நாடுகடத்தியது பற்றி விரிவாக ஆய்வு செய்கிறது. சிறைக் கட்டுப்பாடுகள், சிறை வகைகள், தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட வேலைகள். இறப்பு விகிதம், சென்னைக்கு தப்பியோடி வந்தவர்கள் மற்றும் விடுப்பில் செல்லும் அனுமதிச்சீட்டு முறை அறிமுகம் (1855-1856) குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தண்டனைக்குற்றவாளிகள் வாழ்க்கை முறை காலனியச்சூழலில் எவ்வாறு இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9788197749698
- Pages: 108
- Format: Paperback