ரவீந்திரநாத் தாகூரை இந்தியாவின் மனசாட்சி என்று காந்தியும் நேருவும் கருதினர். தாகூரின் வரலாறு என்பது நவீன இந்திய உருவாக்கத்தின் வரலாறும்தான்.காலனியாதிக்கத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மலரப்போகும் புதிய இந்தியா எப்படி இருக்கவேண்டும்? சுதந்திர இந்தியாவை வழிநடத்தும் அடிப்படை விழுமியங்கள் என்னவாக இருக்கவேண்டும்? நமக்கு எத்தகைய தேசியம் தேவை? அரசியல் விடுதலையா, சமூக விடுதலையா எது முதன்மையானது? கிராமமா, நகரமா எது முக்கியம்? நம் மொழி, மரபு, கலை, இலக்கியம், அரசியல், தத்துவம், வரலாறு ஆகியவற்றில் படிந்துள்ள ஒட்டடைகளை எவ்வாறு அகற்றுவது? புதிய இந்தியாவுக்குத் தேவையான புதிய கனவுகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது? தன் வாழ்நாள் முழுக்க தாகூர் இக்கேள்விகளை ஆராய்ந்துகொண்டிருந்தார். தன் சொல்லாலும் செயலாலும் விடைகளையும் அளித்துக்கொண்டிருந்தார்.விரிவான தரவுகளோடும் மேற்கோள்களோடும் தாகூர் குறித்து இவ்வளவு செறிவாக ஒரு நூல் தமிழில் இதற்குமுன்பு வந்ததில்லை. இதுவரையில் வந்த தாகூரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் கவனம் பெறாத, தென்னிந்திய, இலங்கை பகுதிகளுடனான அவரது ஊடாட்டங்கள் இதில் பதிவாகியுள்ளன. வாழ்வோடு சேர்த்து தாகூரின் சிந்தனைகள் வளர்ந்த வரலாற்றையும் இணைத்து விவரித்திருக்கும் வகையில் இந்நூல் மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் தாகூரின் இடம் என்ன என்பதையும் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது.மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான வீ.பா. கணேசன் தாகூரையும் அவர் வாழ்ந்த காலத்தையும் துல்லியமாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9789390958931
- Pages: 336
- Format: Paperback