இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தமிழகத்தின் பங்கேற்பு மகத்தானதாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என பட்டியல் நீளும் போது இவர்கள் அனைவருமே அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போராடியபர்கள் என்பதை எவர் மறுக்க முடியும்?