தேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளும். விடிய விடியப் படித்து நன்றாகத் தயார்செய்து இருப்பவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும் என்றால், கவனக்குறைவாக இருப்பவர்களின் கதி..? இந்தப் ‘பொது’வான பயத்தை நீக்க வேண்டும் என்றால், பொது அறிவை வளர்த்துக் கொண்டு, தகவல்களை முடிந்த அளவு மனதில் இருத்திக் கொள்வதுதான் ஒரேவழி. அனைத்துத் துறை சார்ந்த பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான தகவல்களை மிகவும் எளிய நடையில் இந்த நூலில் அளித்திருக்கிறார், டாக்டர் சங்கர சரவணன். TNPSC _ குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற அரசுப் பொதுத் தேர்வுகளுக்கான பொது அறிவுத் தகவல்களை மிகவும் துள்ளிதமாக வழங்குகிறது இந்த நூல். மேலும், UPSC, வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு, TRB (ஆசிரியர் தேர்வு), TNUSRB (சப் இன்ஸ்பெக்டர் தேர்வு), அறநிலையத் துறை தேர்வு... உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளுக்கான பொது அறிவுத் தகவல்களையும் விளக்கங்களையும் அளிக்கும் களஞ்சியம் என சிறப்புத் தகுதி படைத்தது இந்த நூல். வரலாறு, புவியியல், அரசமைப்பு, பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், அறிவுக் கூர்மை, பொது அறிவு, தமிழ்நாடு, தத்துவம்&பண்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு உரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. பட்டப்படிப்புத் தரத்தில் அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதிரி வினா_விடைகள் அளித்திருப்பது சிறப்பு அம்சம். தேவையான இடங்களில் விளக்கங்கள் அளிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, படிக்கும் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள்... என அனைவருக்கும் பயனுள்ள பொது அறிவுக் களஞ்சியம்!
- Edition: 01
- Published On: -
- ISBN: -
- Pages: -
- Format: Paperback