மத்திய தர வர்க்கத்தை எப்போதும் சில பூதங்கள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்.அல்சர்,கொலஸ்ட்ரால்,பிரஷ்ஷர்,டயபடீஸ்,அனீமிக்,ஸ்பாண்டிலிடீஸ் மூட்டு வலி,யூரினல் பிரங்னை,கிட்னியில் ஸ்டோன் ஆகிய இந்த இங்கிலீஷ் பேர் கொண்ட பூதங்களால் அலைக்கழிக்கப்படாத நடுத்தர வர்க்கத்து நடுத்தர வயது மனிதனோ மனுஷியோ இருக்க முடியாது.இந்த பூதங்களுக்கெல்லாம் வேப்பிலையடித்து விரட்டுவதற்கான எளிய உபாயங்களை நமக்குச் சொல்கிறது இப்புத்தகம்.கொழுப்பு பற்றிய மூட நம்பிக்கைகள் பல நம்மிடம் உண்டு.நமது உணவில்15விழுக்காடு வரை கொழுப்பு இருப்பது அவசியம் தான்.தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை.சில விளம்பரங்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நிம்மதியாக நம்மைங் சாப்பிட விடாமல் தடுக்கின்றன.அப்புறம் சின்னதாக உடல் உபாதை ஒன்று வந்து விட்டால் பதறியடித்து உடனே மருத்துவரிடம் ஓடோடிச் சென்று தேவையற்ற டெஸ்ட்டுகள் செய்து அளவுக்கு அதிகமான மாத்திரைகள் ஊசிகள் அறுவைங் சிகிச்சை என உடம்பையும் மனசையும் இம்சிக்கிறோம்.மாற்று மருத்துவ முறைகளில் துன்பமில்லாமல் நிவாரணம் இருக்கையில் நாம் அறிவியல்பூர்வமானது என்கிற நம்பிக்கையில் அலோபதியிலேயே விழுந்து கிடக்கிறோம்.இப்படியாக நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய மருத்துவக் குறிப்புகளுடன் சரியான உணவுப் பழக்கத்துக்கான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம்.நல்ல நகைச்சுவை உணர்வுமிக்க நடையில் நம் கைகளில் தவழும் இப்புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.படித்துக் குடும்பத்தோடு தெளிவு பெற உதவக்கூடிய புத்தகம்.