தற்கால நிலைமையில் தங்களது புத்தகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. வேலைகளை உருவாக்குவது மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த கடுமையான காலகட்டத்திலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும்.
- டாக்டர் பழனிவேல் தியாகராஜன்,
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர், தமிழ்நாடு அரசு
கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்குவதே செழிப்பான பாதைக்கு வழிவகுக்கும் என்பதே இந்த ஆசிரியரின் கூற்று.
- டாக்டர் சி. ரங்கராஜன், முன்னாள் கவர்னர், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா
இந்தப் புத்தகம் புதிய வேலை வாய்ப்புக்கான கொள்கையை உருவாக்க மிகுந்த உதவியாக இருக்கும் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.
– டாக்டர் எஸ். நாராயணன், IAS., முன்னாள் செயலர், நிதித்துறை, இந்திய அரசு
புதிய கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கும் இப்புத்தகத்தைப் படிப்பதற்குப் உறுதியாக பரிந்துரைக்கிறேன்.
- திரு. ரிஷிகேஷா டி. கிருஷ்ணன், இயக்குநர், IIM, Bangalore
வேலைகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்த எழுத்தாளரின் வலியுறுத்தலாகும். திரு.வரதராஜன் அவர்கள் ஆலோசனை மட்டும் வழங்காமல் இந்திய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, நடைமுறைப்படுத்தக்கூடிய கருத்துகளை கூறியுள்ளார். கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி, புதிய தொழில்கள் தொடங்குவதை ஊக்குவிக்கலாம் என்ற தன்னுடைய நூதனமான யோசனையையும் பகிர்ந்துள்ளார்.
- திரு சி.வி. சங்கர், IAS., முன்னாள் கூடுதல் தலைமை செயலர், தமிழ்நாடு அரசு
- Edition: 1
- Published On: 2023
- Format: Paper Cover