(Free shipping for orders above ₹500 within India)
இலக்கியம் என்பது மக்களின் வாழ்வியல், பண்பாடு, சமூகம் மற்றும் உணர்வுகளைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். இது அறம், பொருள். இன்பம், வீடு ஆகியவற்றை வலியுறுத்தி, சமூகத்தை நெறிப்படுத்துவதுடன், இன்பம் பயப்பதாகவும் அமைகிறது. சங்க இலக்கியம் முதல் தற்காலப் புதுக்கவிதை வரை, மனித உணர்வுகளையும், இயற்கை அழகையும். சமூக உண்மைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இலக்கியம் திகழ்கிறது. இத்தகைய இலக்கியங்களில் கல்வி, உழைப்பு. குடும்பம், கற்பு, குழந்தை தாலாட்டு ஆகிய பொருண்மைகளில் காணப்படும் செய்திகளை ஐந்து கட்டுரைகளாகத் தொகுத்து அளிக்கிறது இந்நூல். சங்க காலத்தில் ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கிய தன்மையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடன் என்று புறநானூறு தந்தையின் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது. நல்ல கல்வியை வழங்குவதே சிறந்த பண்பென்று நாலடியார் கூறுகிறது. இதுபோலவே உழைப்பின் முக்கியத்துவத்தை. உழவின் முக்கியத்துவத்தை சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று எடுத்துக்காட்டுகிறது திருக்குறள். 'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே' என்னும் புறநானூற்றடிகள் தொழிற்கல்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இல்லறம் பேணுதல் மகளிர்க்கு கடமை என்பதை, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்கிறது குறுந்தொகை. திருவள்ளுவர் கற்புடை மகளிர் ஒருமை மகளிர் என்று போற்றுகிறார். கம்பர் கற்பு என்பதை மனத் தவம், மனத்தின் மாண்பு. தூய்மை எனப் பலவாறு விளக்கியுள்ளார். தாலாட்டு பாடல்கள் வாய்மொழியாக வந்து நாட்டுப்புறப் பாடல்களாக பதிவு செய்யப்பட்டு இன்று ஒரு இலக்கிய வகையாக மிளிர்கிறது. இவ்வாறு வாழ்க்கைக்குரிய அனைத்து செய்திகளும் அடங்கியதாக இலக்கியங்கள் திகழ்வதை இந்த நூல் வழி அறிந்து கொள்ள முடிகிறது.
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹95 ₹100 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy