இங்கு பணியாற்றிய பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு நிர்வாகமே உரிய ஊதியம் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க மறுத்தது. இப்படி, அரசு அச்சக தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினரால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்துடன் 1988ல் முதன் முதலில் தொண்டர் துரைச்சாமி நினைவகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார். அதற்குப் பின்னர் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மட்டும் அல்லாமல் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கேற்பதற்காகவும் அவரது தொண்டர் துரைச்சாமி நினைவகத் தொடர்பு இன்று வரை நீடித்து வருகிறது. எங்களுக்குள் மிகுந்த பாசமும் தோழமையும் இன்று வரை நீடித்து வருகிறது.