1930க்கு பிறகான காலகட்டதை இந்திய கலைகளின் மறுமலர்ச்சி காலகட்டம் என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிகளின் அதிகாரம் உச்சத்தில் இருந்த போது அது வரை இந்திய கலைகளில் இருந்து வந்த மரபு சார்ந்த பாலியல் குறியீடுகளை நீக்கி விக்டோரியன் மொராலிடி அடிப்படையில் கலைகளை அணுகும் முறை உருவாகி வந்தது. அப்படித்தான் பரதநாட்டியம் என்கிற நடனக்களை சதிர் ஆட்டம் என்கிற பழைய பாணியில் இருந்து புத்துருவாக்கம் பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை சதிர் ஆட்டம் என்கிற கலை தேவதாசிகள் மட்டுமே ஆடக்கூடிய ஒரு கலையாக இருந்து வந்தது. தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக்மிணி தேவி அருண்டேல் போன்ற மகத்தான கலை ஆளுமைகளால் அது எல்லோராலும் பயிலக்கூடிய ஒரு கலையாக பரிணமித்தது. அவர்கள் தான் முதன் முதலில் சதிர் ஆட்டம் என்கிற பெயரை மாற்றி பரதநாட்டியம் என்று அதிகாரப்பூர்வமாக்கினர். ருக்மிணி தேவி அருண்டேல் பரதநாட்டியத்தை விக்டோரியன் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு சதிர் ஆட்டத்தில் அது வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஸ்ரிங்கார பாவம் எனப்படும் பாலியல் சார்ந்த முத்திரைகளை நிராகரித்தார்.
இந்த விஷயத்தில் பாலசராஸ்வதிக்கும் ருக்மிணி தேவி அருண்டேலுக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். தேவதாசிகள் என்கிறவர்கள் கோவில்களிலும் அரண்மனைகளில் நடனம் ஆடும் ஒரு முக்கியமான வகுப்பினர்களாக கருதப்பட்டனர். மன்னராட்சி முடிவுக்கு வந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிகளின் அதிகாரம் உச்சத்தை எட்டும்போது இந்த தேவதாசி வகுப்பினர் சமூகத்தில் மிகவும் கீழ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு தேவதாசி வகுப்பை சேர்ந்தவர் தான் பாலசரஸ்வதி. இந்தியக்கலையை உலகளவில் கொண்டு சென்று பெருமை சேர்த்த மகத்தான பரதநாட்டிய கலைஞர். பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியக்கலையை வெளிநாட்டவர்கள் வியந்து திரும்பிப்பார்க்க செய்தவர். பலரும் அவரோடு இங்கு வந்து தங்கி பரதக்கலையை கற்றுச் சென்றிருக்கிறார்கள். பரதநாட்டியத்ததை நவீனப்படுத்தி எல்லோராலும் பார்த்து ரசிக்கும் கலையாக மாற்றினார்.
இந்த புத்தகம் பாலசரஸ்வதியின் பல்வேறு வாழ்க்கைக் கட்டங்களை விரிவாக சொல்வது மட்டுமல்லாமல் அக்கலாகட்டத்து சமூக கலைகளின் வளர்சிதை மாற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது. அந்த வகையில் இது ஒரு முக்கியமான படைப்பு. பாலசரஸ்வதியின் மருமகனான திரு.டக்லஸ் எம் நைட் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதி வெளியான Balasaraswathi: Her life and Art என்கிற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இந்த புத்தகம். தி இந்து நாளிதழின் ஆசரியரும் பொண்ணாகரம், பயணம் போன்ற நாவல்களை எழுதியவருமான அரவிந்தன் இந்த புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.
~ சந்திரசேகர்
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789382394266
- Pages: 392
- Format: Paperback