அருந்ததி ராய்

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய்க்

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய்க்கும் பிறந்தார். தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அருந்ததி ராய் நாவல்கள் , அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.

Read More

Read Less

By continuing, you agree to our Terms of Use and Privacy Policy

Wp Chat