அதை எழுதுவதற்கு நமக்கு மனம் தான் வேண்டும். இதிலுள்ள கதைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் எனது வாழ்க்கையுடன் தொடர்புடையது.. அல்லது எனது மனதை பாதித்தது.. அல்லது இப்படி எல்லாம் நடக்கக் கூடாதா என ஆசைப்பட்டது.. இது போன்ற பல இப்படிகள்.. இதைச் சுற்றியே கதைகள் அமைந்தது.
இத் தொகுப்பிலுள்ள மதிப்பில்லா உயிர் என்ற கதை கூட எனது உடன் பிறந்த அக்கா இறக்கும் தருவாயில் நடந்த நிகழ்வுகள், அந்த சோகமான நிலையிலும் சிரிப்பு வர வைத்தது. ரசிக்கும் மனசிருந்தால் எந்த சூழ்நிலையையும் நாம் கதையாக்க முடியும் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொருவர் வாழ்க்கையும் கதைகள் தானே.. அதை நானும் எழுதிப் பார்த்திருக்கிறேன்.