அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். சாலிம் அலியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், சுவாரசியங்கள் ஒரு கதையின் திருப்பங்களுக்கு நிகரானவை. அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் சாலிம் அலியையும் அவருடைய பணியையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இந்த நூல்.