(Free shipping for orders above ₹500 within India)
பலரும் மறந்துபோன அரசியல் கதைகளை வலிக்க வலிக்கப் பேசியுள்ளது இந்தப் புத்தகம்.இன்றைக்கு அதிமுக, திமுக கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்ததாகப் பலரும் புறம்பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் எம்.ஜி.ஆர். மறைந்தபோதே அதிமுக ஆட்சியைக் காப்பாற்றத் திமுகவிடம் ஆதரவு கேட்டார் ஜானகி என்பதை எத்தனை பேர் அறிவர்?
அதேபோல், மு.கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் போராடித்தான் இடம் பெற்றது திமுக என்பது பலரும் அறிந்ததே. ஆனால், அண்ணா மறைந்தபோது அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அரசு திட்டமிட்டபோது நடந்த சர்ச்சை உங்களுக்குத் தெரியுமா?
அத்துடன் முடியவில்லை. எம்.ஜி.ஆர். மறைந்தபோது அவரது உடலை முதலில் புதைக்கத் திட்டமிடவில்லை. பதப்படுத்திப் பாதுகாக்க ஒரு யோசனை ஆலோசிக்கப்பட்டது. அது என்ன ஆனது தெரியுமா?பாரத் விருதை எம்.ஜி.ஆருக்கு அறிவித்தது மத்திய அரசு. அதை வேண்டாம் எனப் புறக்கணித்தார் எம்.ஜி.ஆர். அந்தச் சம்பவத்தின் பின்னணியில் மு.கருணாநிதியின் பெயர் புகைந்தது. அதற்கு அன்றைய ஒரு வாரப் பத்திரிகை தூபம் போட்டது. அதை மறுத்துக் கடிதம் எழுதினார் கலைஞர். இந்தச் சண்டைக்கு உள்ளே நடந்தது என்ன?
எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட வேளையில், மெரினாவில் ஒரு கூட்டம் நடந்தது. "இதயக்கனியை வண்டு துளைத்துவிட்டது" எனக் கூறி உடைந்து அழுதார் மு.க. அன்றைக்கு நடந்தது இளம் தலைமுறைக்குத் தெரியுமா?கட்சியைக் காக்க வேண்டி முதல்வர் பதவியைத் துறந்தார் காமராஜ். ஆனால், அது கட்சிக்குப் பணம் சேர்ப்பதற்காகக் காமராஜ் போட்ட திட்டம் என்றார்கள். உண்மையில் காமராஜரின் கே. பிளான் வெற்றி பெற்றதா?இப்படி நீதிக்கட்சி காலம் முதல் விஜய் குதிரைபேர அரசியல் சர்ச்சை வரை ஒரு நீண்ட நெடிய அரசியல் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது இந்நூல். மறந்தவர்கள் மீண்டும் அந்தக் காலத்து நினைவை அசைபோடவும், இளம் தலைமுறை அறிந்துகொள்ளவும் ஆயிரம் கதைகள் இதில் உள்ளன.
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹427 ₹450 (5% Off)
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.
Related Books
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy