பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்பிக்கும் உபாயத்தை உமேஷ் அறிந்திருக்கிறார். இந்தக் கவிதைகள் ஒரு தியானம் போல இருக்கின்றன. மனதின் அமைதியான இடங்களில், சிறிய சொற்களை வெடிக்க வைத்து கடவுளின் இருப்பை அனுபவிக்கிற பரவசத்தைத் தருகின்றன. ‘தண்ணீரின் சிரிப்பு’ தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஒரு புதிய வடிவத்தைத் அளித்திருக்கிறார். ‘உங்கள் இதயம் எனக்கு ஒரு பள்ளத்தாக்கு’ எனக்கூறும் பூவிதழ் உமேஷை இதயத்தில் நிரப்பிக் கொள்வோம்.
-கவிஞர் கரிகாலன்
Reviews
There are no reviews yet.