தேவதேவன்

தேவதேவன்

தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார்.

இளம்வயதில் மரபுக்கவிதைகள் எழுதிவந்த கைவல்யம் தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீனக் கவிதைகளைப் புனையத் தொடங்கினார். குறுகிய காலம் கேரளத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த இயற்கைக் காட்சிகளினால் ஆழ்மான மனநகர்வுக்கு உள்ளாகி நிறைய கவிதைகள் எழுதினார். இக் காலகட்டத்தில் அவர் சுந்தர ராமசாமி தன் வீட்டு மாடியில் நடத்திவந்த காகங்கள் என்ற இலக்கிய உரையாடல் அமைப்பில் நெடுந்தொலைவுப் பயணம் செய்து வந்து கலந்துக் கொள்வதுண்டு.

கைவல்யத்தின் முதல்கவிதைத் தொகுப்பு குளித்துக் கரையேறாத கோபியர்கள் 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு மின்னற்பொழுதே தூரம் பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்து கவிதை வாசகர்களால் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து ‘மாற்றப்படாத வீடு’ பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது. பெரும்பாலான கவிதைகளை தன் நண்பர்களான முத்துப்பாண்டி, லெனா குமார், காஞ்சனை சீனிவாசன் ஆகியோரின் உதவியுடன் அவரே வெளியிட்டு வந்தார். பின்னர் அவரது கவிதைகளைத் தமிழினி பதிப்பகம் வெளியிட தொடங்கியது. 2005 ஆம் ஆண்டு அவரது கவிதைகளுக்கான முழுத்தொகுப்பு தேவதேவன் கவிதைகள் என்ற பெயருடன் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தேவதேவன் கவிதைபற்றி என்ற உரையாடல் நூலையும் அலிபாபவும் மோர்ஜியானாவும் என்ற நாடக நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

1970-80 களில் தூத்துக்குடியில் கலைப்படங்களுக்கான திரைப்படச் சங்கம் ஒன்றையும் நடத்திவந்தார்.

நன்றி: விக்கிப்பீடியா

  • 05 May 1948
  • Male
  • 12