மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன. அருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருள்களையும் அவற்றின் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறுபிரப்ஞசமாக இருக்கின்றன எனது கவிதைகள்.
~ ஷங்கர்ராமசுப்ரமணியன்
Reviews
There are no reviews yet.