ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் (Gnanakoothan) (அக்டோபர் 7, 1938 – சூலை 27, 2016) ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார். “அன்று வேறு கிழமை”, “சூரியனுக்குப் பின்பக்கம்”, “கடற்கறையில் சில மரங்கள்”, “மீண்டும் அவர்கள்” மற்றும் “பென்சில் படங்கள்” போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார். இவரின் கவிதைகள், “கல்கி”, “காலச்சுவடு” மற்றும் “உயிர்மெய்” போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் ‘கசடதபற’. ‘கவனம்’ என்ற சிற்றிதழைத் தொடங்கினார். ‘ழ’ இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம், மற்றும் ராஜகோபாலனுடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார். இவர் ‘மையம்’, ‘விருட்சம்’ (தற்போது நவீன விருட்சம்), மற்றும் ‘கணையாழி’ பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார். க. நா. சுப்பிரமணியத்தின் ‘இலக்கிய வட்டம்’, சி. மணியின் ‘நடை’ போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது. இவரது கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தை சித்தரிப்பதாக உள்ளது.

நன்றி: விக்கிப்பீடியா

  • 07 October 1938
  • Male
  • 4