“மறுநாளுக்கான பொழுது விடிந்திருந்தது. அவள் பிள்ளைகளை சடுதியில் கிளப்பினாள். மடியில் கடைசி கடைசியாக கலெக்டரிடம் கொடுக்க இருக்கும் மனு. தோளில் நான்கு வயது குழந்தை. ஒரு கையில் மகன். மற்றொரு கையில் மகள். மகளின் கையில் சீமெண்ணைக் கேன். அவர்கள் கலெக்டர் ஆபிஸ் நோக்கி நடக்கத்தொடங்கினார்கள்.