"போதமும் காணாத போதம்" என்ற இந்த தொடர் இணையத்தில் திங்கட்கிழமை தோறும் வெளிவந்தபோதும் தொடர்ந்து வாசகர்கள் வாசித்தார்கள். நான் இரண்டு முறை வாசித்தேன்!. இந்த தொடரின் மிகவும் முக்கியமான அம்சம் ஈழ மக்களின் பண்பாடு & வழிபாடு சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் ஆதிக்க சக்திகளால் அவர்களின் மரபுரிமைகள் எவ்வாறெல்லாம் பிடுங்கப்படுகின்றது என்பதை உரத்துப் பேசுவதாக இருக்கின்றது. தொன்மங்களை நினைவு கூர்ந்து, ஆழமான பண்பாட்டு செழுமை கொண்ட ஈழத் தமிழ் நிலம் தங்கள் மேலான இன அழிப்பு போரை எவ்வாறு எதிர்கொண்டது என்பதையும் சமரசமற்று எழுதியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சினிமாக்காரர்களுக்கும் அங்குள்ள பொறுப்பற்ற இளைஞர்களுக்குமான வெறிக்கூச்சல் தள்ளுமுள்ளு சம்பவத்தை உலகெங்கும் எடுத்துச் சென்ற ஊடகங்கள், அதே தீவிரத்துடன் வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலையத்தில் நடந்து கொடுமையான சம்பவங்களை எடுத்துச் சென்றனவா என்ற கேள்வி ஈழத்தமிழர்களின் மனத்தில் எழவேண்டும். இதன் அரசியல் நுட்பமாகப் புரிந்து கொள்ளப்படவேண்டும். நம்மிடம் அரசு இல்லை. ஆதரவு தரத்தக்க நாடுகள் அறவே இல்லை. நமக்கு இருக்கும் ஒரேயொரு வழி கலை - இலக்கியங்கள் மட்டுமே தான். அவற்றில் நாம் ஆழமாக நம்முடைய துயர்கள் - இடர்களை பதிவு செய்து வரலாறெங்கும் கடத்தவேண்டிய கடப்பாடு இருக்கின்றது. வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலையத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், அநீதியாக கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றவர்கள் குறித்தும் நாம் தீவிரமாக பதிவு செய்யவேண்டும். இது தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. இதற்கு முன்னும் நடந்தன... இன்னும் நடக்கும். இவைகளைத் தொடர்ந்து நமது சந்ததிக்கு நாம் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது நம்முடைய கடைமையாகக் கொள்வது மட்டுமே மீட்சிக்கான அடிப்படைத் தேவையாகும்!.
- வாசு முருகவேல்
Edition: 01
Published On: 2024
ISBN: 9788194762331
Pages: -
Format: Paper Cover
Buy Now
(Free shipping for orders above ₹500 within India)
₹304₹320
(5% Off)
-+
Estimated delivery time
Books/ Articles will be shipped within 3-7 working days.
We accept All Payment Methods
With Domestic and International Credit & Debit cards, EMIs (Credit/Debit Cards & Cardless), PayLater, Netbanking from 58 banks, UPI and 8 mobile wallets, Razorpay provides the most extensive set of payment methods.
No Return Policy
Once a Book/ Articles are delivered without damage, it cannot be returned to us.