பனையடி, எழ விரும்பும் எளிய இளைஞர்களுக்கான முன்னடித்தடம், மண் மேவிய தரைப்பலகை விரித்த அரசுப் பள்ளியில் கற்கும் தமிழ் எனும் சராசரி மாணவன் கால் முடக்கிய அவமானங்களையும் துயர்களையும் நெற்றி வியர்வையை வழித்தெறிவதுபோல உதறி எழுகிறான். ‘கரைக்குள் காட்டாறு அடங்க வேண்டியதில்லை’ என்ற ஒற்றை வரியைப் பற்றி மேலேறும் தமிழின் வாழ்க்கைப் போராட்டம் சாமானியரின் வம்ச சரித்திரப் பக்கங்களால் நிரம்பியது. புழுதிபடிந்த ஊரிலிருந்து வரும் இளையோர்கள் கடக்க வேண்டிய கொடுந்தருணங்களை எதார்த்தமாகச் சொல்கிறது நாவல் .யதார்த்தவாத எழுத்தின் அண்மைக்கால வரவு செல்வம் கரஎஸ். வேளாண்மைப் பட்டம் படித்து ஒரு தற்காலிகப் பணியிலிருந்து பிறகு நிரந்தரப் பணிக்கு மாறி அதிலிருந்து மேலும் மேலும் தேர்வுகள் எழுதி இறுதியில் ஒரு உச்சமாக ஐஏஎஸ் ஆகிறவரின் தன்வரலாற்று நாவல்தான் பனையடி குடிமைப்பணித் தேர்வு எழுதுபவர்களின் விடாமுயற்சியைச் சொல்வதாக, அதேநேரத்தில் ஒரு புனைவிற்கான கூறுகளோடு எழுதப்பட்ட இந்நாவலின் முற்பகுதி தந்தையின் கனவு, பிற்பகுதி மகனின் இலக்கு என விரிவுகொள்கிறது மண்ணை நேசிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .- எழுத்தாளர் கண்மணி குணசேகரன்இந்நூல் கதையின் தலைவனைப் பற்றித் தம்பட்டம் அடிக்கும் பிள்ளைத்தமிழோ பரணியோ உலாவோ அல்ல. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனை, அவனது முயற்சியும் சூழலும் காலமும் சேர்ந்து செதுக்கி ஓர் உயர் பதவியில் அமர்த்துவதுதான் பனையடியின் கதை. இது ஒரு தனிமனிதனின் கதையல்ல; சென்ற தலைமுறையில் தங்களது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக மலர்ந்த நூறாயிரம் மனிதர்களின் கதை.- ஆர்.எஸ்.கோபாலன்.
- Edition: 01
- Published On: 2021
- ISBN: -
- Pages: -
- Format: Paperback