பதனி இறக்கிக் கருப்பட்டி காய்ச்சிக் காசு சேர்த்து நிலம் வாங்கிக் காரை வீடு கட்ட வேண்டும் என்கிற கருப்பாயியின் கனவும் சோலைமலையின் வேகத்துக்கு கூடுதலான விசை தருகிறது. நாட்டின் வரலாறும் குடும்ப வரலாறும் சந்திக்கிற புள்ளிகளே நம் சமூக வரலாறாகும் என்பதால் இதுபோன்ற நாவல்களை இனவரைவியல் தளத்தில் வைத்து நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.