பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம்.1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய “தொட்டால் தொடரும்”, “கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று மேக்கப் புன்னகை.நடிகைகள்... நமது கனவுகளை நிரப்பும் தேவதைகள். ஆனால் அவர்கள் மேக்கப் தேவதைகள். அந்த மேக்கப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் வலியும், கண்ணீரும், ஏக்கங்களும், தவிப்புகளும் நமது கண்ணுக்குத் தெரிவதே இல்லை. கவிதை எழுதும், திருமணம் செய்துகொண்ட வாழ ஆசைப்படும் ஒரு நடிகை எதிர்கொள்ளும் போராட்டங்களை துல்லியமாக விவரிக்கும் இந்நாவல் நடிகைகள் குறித்த நமது பார்வையை மீண்டும் பரிசீலனை செய்யக் கோருகிறது.
- Edition: 01
- Published On: 2015
- ISBN: 9789382578819
- Pages: 168
- Format: Paperback