நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கௌரவன்’ துரியோதனன்.பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர், தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரசு பீடத்தில் அமர்ந்திருக்கிறான். இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தர்மனை அரியனையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.இது ஒரு புறம் இருக்க ----அதே அஸ்தினாபுர அரணமனைத் தாழ்வாரங்களில் பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஒர் அந்நிய நாட்டு இளவரசன். அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன.கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்த திருப்பூணித்துறை எனும் பழமையான சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆனந்த் நீலகண்டன். தேவைக்கு அதிகமாகவே கோவில்கள் இருந்த ஒரு கிராமத்தில் அவர் வளர்ந்து வந்ததால், இந்தியப் புராணங்களும் இதிகாசங்களும் அவருக்கு பிரமிப்பூட்டியதில் வியப்பேதும் இல்லை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்தியக் காவியங்களின் எதிர்நாயகர்கள்தாம் அவரைப் பெரிதும் கவர்ந்தனர். அவர்களுடைய மாயாஜால உலகைப் பற்றி அவர் வியந்தார். நம்முடைய இதிகாசங்களில் வருகின்ற, அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டவர்களின் கதைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் அவரைத் தூங்கவிடவில்லை. நாம் நம்முடைய இதிகாசங்கள் குறித்து அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்காமல் அவற்றை மௌனமாக ஏற்றுக் கொண்ட மனப்போக்கின் காரணமாக, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ராவணன், துரியோதனன் போன்ற உண்மையான கதாநாயகர்களை, ஆனந்த் நீலகண்டன் முறையே தன்னுடைய ‘அசுரன்’, ‘கௌரவன்’ ஆகிய நாவல்கள் மூலம் உயிர்த்தெழ வைத்துள்ளார்.
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9788183224857
- Pages: 628
- Format: Paperback