ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அன்று நடைபெற்ற நிகழ்வுகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் படியே இருக்கிறது. தொழிற்சங்கப் போராட்டத்தை எழுதும் போது அது கதையாக வருமா? அல்லது வேலை அறிக்கையாக வெறும் கோவமாக மட்டும் அமைந்து விடுமா? என்ற பயம் இருந்தது. ஆனால் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் கதை போலவே இருந்ததால் சரி எழுதித் தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் எழுதியிருக்கிறேன். இதில் எனது மனைவி அனிதாவுக்கும் மகன் அருண் கிருஷ்ணாவுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. அவர்கள் என்னை எழுதத் தூண்டியவர்கள்.