தங்களது திருப்புமுனை கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில் ஒருவர்தான் ‘அலெக்சாந்தர் ஃபிளமிங்’. அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதைவிட, சாதீய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும் சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும்.