பிரச்னைகளைச் சமாளிக்கத் தெம்பில்லாமல் ஆண்கள்தாம் சாமியாராக ஓடிப்போவது வழக்கம். இந்நாவல், பெண்கள் அப்படி வெளியேறினால் என்னாகும் என்னவெல்லாம் ஆகும் என்பதைப் பேசுவதாக அமைந்துள்ளது இந்நாவலின் சிறப்பு எனலாம். அவருடைய முதல் நாவல் இது என்று சொல்லமுடியாதபடிக்கு விறுவிறுப்பான நடையிலும் எளிய நேரடியான மொழியிலும் கதை சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே நல்ல சிறுகதையாளராக அறியப்பட்டுள்ள வரத.ராஜமாணிக்கம் இனி நல்ல நாவலாசிரியராகவும் பயணத்தைத் தொடர்வார்.